#JUSTIN : குஜராத்தை நோக்கி வந்த ஈரான் படகு... நடுக்கடலில் நடந்த பயங்கர சேசிங் - அரங்கேறிய அதிரடி

Update: 2024-11-15 10:44 GMT

"போதைப்பொருள் இல்லாத பாரதம் என்ற பிரதமர் நரேந்திரமோடியின் தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றி, இன்று நமது அமைப்புகள் ஒரு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை முறியடித்து தோராயமாக குஜராத்தில் 700 கிலோ போதை பொருளை கைப்பற்றியுள்ளது

போதைப் பொருள் தடுப்பு பிரிவு, இந்திய கடற்படை மற்றும் குஜராத் காவல்துறை இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கை, தொலைநோக்குப் பார்வைக்கான நமது அர்ப்பணிப்புக்கும், அதை அடைவதில் நமது அமைப்புகளுக்கு இடையே உள்ள தடையற்ற ஒருங்கிணைப்புக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இந்த முக்கிய முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்

குஜராத்தின் போர்பந்தரில் சோதனையின்போது 700கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது

குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போர்பந்தரில் நடத்தப்பட்ட சோதனையின் போது போதைப்பொருள் கடத்தல் முறியடிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையின் போது ஈரானியர்கள் என கூறிக்கொள்ளும் 08 வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்