அபிஷேகம் செய்தபோது நெஞ்சை பிடித்து சாய்ந்த நபர் - பரபரப்பு சிசிடிவி காட்சிகள் | Gujarat | CCTV

Update: 2024-11-21 15:21 GMT

குஜராத் மாநிலத்தில், கோயிலில் சாமிக்கு அபிஷேகம் செய்து கொண்டிருந்த முதியவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். வல்சாத் பகுதியில், பர்னேரா மலையில் உள்ள மகாதேவ் கோயிலில், 62 வயதான முதியவர் கிஷோர்பாய் படேல் தினசரி பூஜை செய்வது வழக்கம். அதன்படி, கிஷோர்பாய் நேற்று மகாதேவருக்கு ஆரத்தி காட்டிவிட்டு, சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தார். அப்போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அங்கிருந்த பக்தர்கள் அவருக்கு CPR கொடுத்தனர். எனினும், கிஷோர் பாய் படேல் உயிரிழந்தார். இதுதொடர்பான சிசிடிவி பதிவுகள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்