நாட்டையே நடுங்க வைத்த கொலை.. சிக்கிய முக்கிய குற்றவாளி - திக் திக் நிமிடங்கள்
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் சித்திக் கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி மும்பையின் பாந்த்ரா பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கு தொடர்பாக லாரன்ஸ் பிஷ்னோய் உள்பட 18 பேரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். குஜராத் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோயை தங்களது காவலில் எடுத்து விசாரிக்க மும்பை போலீஸார் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு இதுவரை மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி கொடுக்காமல் இருக்கிறது. இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சிவக்குமார் மற்றும் அவரது உதவியாளர் ஞாயிறன்று பிடிபட்டார். உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து நேபாள் தப்பி போவதாக இருந்த நிலையில், உத்தர பிரதேச போலீசாரின் உதவியுடன் மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சிவகுமார் மற்றும் அவர்கள் உதவியாளரை மும்பைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.