கர்நாடாகாவில் பட்டியலின பெண்ணை கல்லால் அடித்து கொன்ற 17 பேருக்கு சாகும் வரை மறக்க முடியாத தண்டனை
கர்நாடகாவில் பட்டியலின பெண்ணை கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில், 14 ஆண்டுகளுக்கு பிறகு 2 பெண் உள்பட 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தும்கூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோபாலபுரத்தில் வசித்து வந்த பட்டியலினத்தை சேர்ந்த ஹொன்னம்மா, வேறு சமூகத்தை சேர்ந்த நபர்களால் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான விசாரணை தும்கூர் நீதிமன்றத்தில் கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், 17 பேருக்கு ஆயுள் தண்டனையும், 4 பேருக்கு நான்காண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.