``எதிர்க்கட்சித் தலைவர் பதவி வகிக்க தகுதியற்றவர் ராகுல் காந்தி'' - ஷிவ்ராஜ் செளஹான்

Update: 2024-12-20 14:24 GMT

எதிர்க்கட்சித் தலைவர் பதவி வகிக்க தகுதியற்றவர் ராகுல் காந்தி என மத்திய அமைச்சர் ஷிவ்ராஜ் செளஹான் கூறியுள்ளார். அம்பேத்கர் விவகாரத்தை முன்வைத்து நேற்று நாடாளுமன்ற நுழைவு வாயில் முன்பு தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி எம்பிக்கள்

நடத்திய போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக எம்பிக்களை சந்தித்த பின், மத்திய அமைச்சர் ஷிவ்ராஜ் செளஹான் ஜனநாயகத்தை அவமதிப்பது தான் காங்கிரஸ் கட்சியின் டிஎன்ஏ என குற்றம் சாட்டினார். 1975இல் இந்திரா காந்தி ஜனநாயகத்தின் குரல்வளையை

நெரித்தது போல தற்போது ராகுல் காந்தி அந்த மரபை முன்னெடுத்து செல்வதாக குற்றம் சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்