டெல்லியில் பாஜக அலுவலகம் முன்பே கிடந்த மர்ம பை - உள்ளே இருந்தது என்ன?. பரபரப்பு காட்சிகள்
டெல்லியில் உள்ள பாஜக மாநில அலுவலகம் அருகே, சாலையோரத்தில் கருப்பு நிற பை ஒன்று கிடந்தது. அதற்கு யாரும் உரிமை கோராததால், மர்ம பை இருந்த இடத்தை சுற்றி, காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து, தனிமைப்படுத்தினர். இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழல் காணப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சந்தேகத்திற்கிடமான பொருள் ஏதேனும் இருக்குமா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில், வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.