வெளியே வந்தான் பூமிக்குள் 40 அடியில் சிக்கிய சிறுவன் - மூச்சு இருக்கிறதா?.. இல்லையா?
மத்தியப்பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் சுமித், நேற்று பிற்பகல் விளையாடிக் கொண்டிருந்தபோது, சுமார் 40 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதனால் பெற்றோர் அதிர்ச்சியடைந்த நிலையில், தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர், சிறுவனை மீட்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டனர். ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மண்ணை தோண்டும் பணிகள் நடைபெற்றன. சிறுவனுக்கு குழாய் மூலம் தொடர்ந்து செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்தது. இதன் பலனாக, இன்று காலை 9.30 மணியளவில் ஆழ்துளையில் இருந்து சிறுவன் மீட்கப்பட்டதாகவும், மயங்கிய நிலையில் உள்ளதால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.