பாலியல் குற்றச்சாட்டு தெரிய வந்ததும்..அடுத்த நொடி நடிகர் பிருத்விராஜ் அதிரடி ஆக்ஷன்
படப்பிடிப்பின்போது துணை இயக்குநர் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானதை தெரிந்த உடன், தனது குழுவிலிருந்து வெளியேற்றியதாக நடிகர் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார். மேலும், குற்றச்சாட்டுக்கு உள்ளான துணை இயக்குநர் மன்சூரை, காவல்துறையின் முன்பு ஆஜராகி சட்ட ரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ளுமாறு அறிவுறுத்தியதாகவும் கூறினார். கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற எம்புரான் படப்பிடிப்பின்போது தான் இச்சம்பவம் குறித்து தனக்கு தெரிய வந்ததாகவும் நடிகர் பிருத்விராஜ் தெரிவித்தார்.