கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் வனவிலங்குகள் ஊடுருவல் பிரச்னையை சமாளிக்க, கூடுதல் தலைமைச் செயலாளர்கள் மட்டத்தில், கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இணைந்து செயல்திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. வனவிலங்கு தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியார் மற்றும் கோபிநாத் பி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு இந்த பரிந்துரையை அளித்துள்ளது.