தொண்டர்கள் மனதில் இடியாய் இறங்கிய... மாயாவதியின் முடிவு

Update: 2024-11-24 11:20 GMT

உத்தரப்பிரதேச மாநில இடைத்தேர்தலில் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளில், ஆறில் பா.ஜ.க வெற்றி பெற்றது. அதன் கூட்டணிக் கட்சியான ஆர்எல்டி ஒரு இடத்தில் வென்றது. மீதமுள்ள இரண்டில் எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றது. இதுகுறித்து மாயாவதி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது இவிஎம் குறித்து கேள்வி எழுப்பிய அவர், அதன்மூலம் போலி வாக்குப்பதிவு நடைபெறுவதாகவும், பகுஜன் சமாஜ் கட்சியை பலவீனப்படுத்த சதி நடப்பதாகவும் குற்றம் சாட்டினார். இதுபோன்ற சூழ்நிலையில், தேர்தல் ஆணையம் போலி வாக்களிப்பைத் தடுக்க கடும் நடவடிக்கைகளை எடுக்கும் வரை, தாங்கள் இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்றும் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்