பார்ப்போரை கண் கலங்க வைக்கும் நாயின் பாசப்போராட்டம்

Update: 2024-12-08 02:03 GMT

தெருவில் கேட்பாரற்றுக் கிடந்த தன்னை மீட்டு பராமரித்த உரிமையாளர் இறந்ததால் உடைந்து போன நாய், அவரது சடலத்தை இறுதியாகக் காண அல்லாடித் திரிந்தது காண்போரைக் கண் கலங்கச் செய்தது... கேரள மாநிலம் திருவல்லா பகுதியைச் சேர்ந்த மேத்யூ கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் தெருவில் பாவமாக தனியே தவித்துக் கொண்டிருந்த நாய்க் குட்டியைக் கண்டெடுத்து அதற்கு டைகர் என பெயரிட்டு பாலூட்டி சோறூட்டி செல்லப் பிள்ளை போல் வளர்த்து வந்தார்... மேத்யூ உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில் அவரது உடலை உறவினர்கள் அடக்கம் செய்வதற்காக வண்டியில் ஏற்றியபோது தன் உரிமையாளரை இறுதியாய் ஒருமுறை காண பதறித் துடித்து அங்கும் இங்கும் அலைபாய்ந்து திரிந்தது டைகர்... நாயின் நன்றியுணர்வும் பாசமும் பார்ப்போரை கலங்கச் செய்தது...

Tags:    

மேலும் செய்திகள்