#BREAKING || வெடித்த `பஞ்சமசாலி' ஒதுக்கீடு.. போலீசார் மீது பறந்த பேரிகார்டு.. பெலகாவியில் பரபரப்பு
வெடித்த `பஞ்சமசாலி' ஒதுக்கீடு.. போலீசார் மீது பறந்த பேரிகார்டு..பெலகாவியில் பெரும் பரபரப்பு
#karnataka #ThanthiTv
ஜகத்குரு பசவஜய மிருத்யுஞ்ஜய சுவாமிகள் தலைமையில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் பங்கேற்று, ஓ.பி.சி இட ஒதுக்கீட்டில் 2A பிரிவில் தங்களை சேர்க்க வேண்டும் என பஞ்சமாசாலிகாயத் சமூகத்தினர் இன்று போராட்டம் நடத்தினர்.
அரசு வேலைகள் மற்றும் கல்வி பிரிவுகளில் 15% ஒதுக்கீட்டை பெற 2A பிரிவில் சேர்ப்பதே இவர்களின் பிரதான கோரிக்கை.
தற்போதைய 3B வகை ஒதுக்கீட்டில் பஞ்சமசாலி சமூகத்தினருக்கு 5% ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது, இது போதுமானதல்ல என்று போராட்டக்காரர்கள் கூறுகிறார்கள்