``இயேசு தான் கனவில் வந்து சிலையை உடைக்க சொன்னார்'' - கர்நாடகா இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்
``இயேசு தான் கனவில் வந்து சிலையை உடைக்க சொன்னார்'' - கர்நாடகா இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்
கர்நாடகாவில், இயேசு சொன்னதால் மடாதிபதியின் சிலையை உடைத்ததாக, ஒரு நபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கர்நாடகாவின் பிரபல மடாதிபதியான மறைந்த சிவகுமார சுவாமியின் சிலையை உடைத்த விவகாரத்தில், ராஜ் சிவு என்ற நபரை போலீசார் கைது செய்தனர். 7 ஆண்டுகளுக்கு முன் இந்து மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு மாறிய ராஜ் சிவு, போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இயேசு தனது கனவில் தோன்றி மடாதிபதியின் சிலையை சேதப்படுத்த கூறியதாகவும், அவரது கூற்றுப்படி சுத்தியலால் சிலையை சேதப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இதை மறுத்துள்ள போலீசார், ராஜ் சிவுக்கு மனரீதியான பிரச்சனை இருப்பதாக தெரிவித்துள்ளனர்.