EX முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மறைவு - வெளியான அறிவிப்பு
மறைந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா உடல், முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என, கர்நாடக அரசு அறிவித்துள்ளது. மேலும் மாநிலத்தில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் இன்று தொடங்கி 12ம் தேதி வரை, தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.