கன்னட திரையுலக சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாருக்கு புற்றுநோய் ?.. தென்னிந்திய திரையுலகை ஆட்டிப்படைத்த தகவலின் உண்மை பின்னணி

Update: 2024-12-06 11:09 GMT

சுமார் 30 வருடங்களாக 125 படங்கள் நடித்து கன்னட திரையுலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் சிவராஜ்குமார்....

கன்னட திரையுலகில் அசைக்க முடியாத சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ள அவர், தமிழில் ஜெயிலர் படம் மூலம் அதிரடி என்ட்ரி கொடுத்தார்..

திரையில் இவர் வரும் காட்சிகள் பட்டையை கிளப்ப, தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்திலும் மிரட்டியிருந்தார்..

இப்படியாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து தென்னிந்தியாவில் முக்கிய நடிகராகவும் அறியப்பட்ட சிவராஜ்குமாருக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக பரவிய செய்தி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது..

இதுமட்டுமன்றி, அவர் தனது சொத்துக்களையெல்லாம் அனாதை ஆசிரமங்களுக்கு எழுதி வைத்து விட்டதாகவும் தகவல் பரவின...

இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீயாய் பரவி வர..இதன் பின்னணியை ஆராய்ந்ததில் பல தகவல்கள் வெளியானது...

கன்னட திரையுலக சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமாருக்கு நோய் இருப்பது உண்மை தான், ஆனால் அது புற்றுநோயல்ல என்பது அவரது சமீபத்திய நேர்காணல் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது..

எனக்கு நோய் இருப்பது உண்மைதான். ஆனால் அது என்ன நோய் என்று தெரியவில்லை. அதேசமயம் அது புற்றுநோய் இல்லை. இதன் காரணமாக ரசிகர்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம் என தெரிவித்ததோடு, தனது நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், ஜனவரி மாதம் அமெரிக்காவில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின் பூரண குணமடைவேன் எனவும் தெரிவித்திருந்தார்..

இதன் மூலம், அவருக்கு புற்றுநோய் எனக் கூறப்படும் தகவல் உறுதியாகவில்லை...

மேலும், அவர் அனாதை ஆசிரமத்திற்கு சொத்துக்கள் எழுதி வைத்ததாக கூறப்படுவது எப்போதோ நடந்த சம்பவம் என திரைத்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது..

சிவராஜ்குமாரின் தந்தை ராஜ்குமார், தான் இறப்பதற்கு முன்பாக சொத்துக்களை தனது இரு மகன்களுக்கு பிரித்து கொடுத்த போது, தனது பங்கை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சிவராஜ்குமார் கொடுத்ததாக கூறப்படுகிறது..

எப்போதோ நடந்த சம்பவத்தை தற்போது தொடர்புப்படுத்தி வதந்தி பரப்பி வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..

ஏற்கனவே சிவராஜ்குமாரின் சகோதரர் புனித் ராஜ்குமார், ஜிம்மில் அதீத பயிற்சி செய்ததால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம், கன்னட ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், சிவராஜ்குமாருக்கு புற்றுநோய் எனப் பரவிய வதந்தி அவர்களை சோகத்தில் ஆழ்த்தியது...

இருப்பினும் இது தொடர்பாக சிவராஜ்குமார் தரப்பில் பதிலளிக்கப்படாத சூழலில், அதிர்ச்சியில் உள்ள ரசிகர்களுக்கு உரிய விளக்கமளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது..

Tags:    

மேலும் செய்திகள்