இறந்து விட்டதாக குழிதோண்டி புதைக்கப்பட்ட பெண்...மண்ணுக்குள் இருந்து உயிரோடு வந்து பழிதீர்த்த சம்பவம்

Update: 2024-11-09 04:40 GMT

கர்நாடகாவில் கணவருடன் தகாத உறவில் இருப்பதாக கருதி, யோகா ஆசிரியையை கூலிப்படையை ஏவி மனைவி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் உள்ள திப்புரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் பிந்துஸ்ரீ. இவருடைய கணவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த யோகா ஆசிரியை ஒருவருக்கும் தகாத உறவு இருப்பதாக கருதி, கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் யோகா ஆசிரியையை கொலை செய்ய திட்டமிட்டு, பெங்களூருவை சேர்ந்த துப்பறியும் நிறுவனம் நடத்தி வரும் சதீஷ் ரெட்டி என்பவரிடம் பிந்துஸ்ரீ தனது திட்டத்தை தெரிவித்தார். இதையடுத்து, 3 மாதங்களுக்கு முன்பு, யோகா ஆசிரியை நடத்தி வரும் வகுப்பில் சேர்ந்த சதீஷ் ரெட்டி, அவரிடம் பழகி, துப்பாக்கிச்சுடும் பயிற்சி அளிப்பதாக கூறி, வெளியே அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரின் ஆடைகளை களைந்து தாக்கி விட்டு, இறந்து விட்டதாக கருதி சிறிய அளவில் குழிதோண்டி புதைத்து விட்டு வந்து விட்டனர். அதில் உயிர் பிழைத்த அந்த ஆசிரியை, சுயநினைவு திரும்பிய பிறகு வனப்பகுதி வழியாக 2 கிலோ மீட்டர் வரை நடந்து சென்று, ஒரு வீட்டில் கொடுத்த ஆடைகளை அணிந்து கொண்ட பிறகு சிட்லகட்டா போலீசில் புகாா் அளித்தார். விசாரணை நடத்திய போலீசார், கூலிப்படையாக செயல்பட்ட சதீஷ் ரெட்டி உள்ளிட்ட 4 பேரையும், பிந்துஸ்ரீயையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தங்க நகைகள், திருடப்பட்ட கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்