புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில், முன்னாள் தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான், குடும்பத்தோடு தரிசனம் செய்தார். புரோகிதர்கள் மற்றும் திருநங்கைகளை உடன் அழைத்து வந்து, தீபம் ஏற்றி சிறப்பு பரிகார பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார்.
மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்பதால், திருநங்கையை அழைத்து வந்து சிறப்பு பூஜையில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட செஞ்சி மஸ்தான், அமைச்சரவையில் இருந்தும் நீக்கப்பட்டார். இதையடுத்து அவர்,
திருநள்ளாறு சாமி தரிசனம் செய்துள்ளார்.