- தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 10, 12ஆம் வகுப்புகளில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடப்பதால் சர்ச்சை
- தமிழக அரசின் உத்தரவை மீறி, சிறப்பு வகுப்புகள் நடத்துமாறு முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டதால் சர்ச்சை
- கடும் வெப்பம் நிலவும் என்பதால் பள்ளிகளில் மாணவர்களுக்கு எந்தவித பயிற்சியோ, சிறப்பு வகுப்புகளோ நடத்த கூடாது என தலைமை செயலாளர் ஏற்கனவே உத்தரவு
- பள்ளி கல்வித்துறையும் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடப்பதால் குழப்பம்
- பள்ளி கல்வித்துறை வெளியிட்ட உத்தரவை, பள்ளி கல்வித்துறையே மீறுவது முற்றிலும் முரண்பாடாக உள்ளது என ஆசிரியர்கள் வேதனை
- சிறப்பு வகுப்புகள் தொடர்பாக, பல்வேறு அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்களுக்கும் வாட்ஸ் அப் மூலம் ஆடியோ செய்தியும் அனுப்பி வருகின்றனர்