விக்ரம் லேண்டரின் கால் தடம்.. சீட் நுனியில் உலகம்.. திக்..திக்.. சம்பவம்-சந்திரயான்-3 பிளாஸ்பேக்..!

Update: 2023-08-23 06:33 GMT

இன்று மாலை நிலாவில் தரை இறங்குகிறது, சந்திரயான் -3

இந்திய வானியல் ஆராய்ச்சியில் சரித்திர சாதனை

நிலாவின் தென் துருவத்தில் இதுவரை எந்த நாடும் தரை இறங்கியதில்லை

இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் கால் பதிக்கிறது

இன்று மாலை 5.40 மணியில் இருந்து தரை இறங்கும் பணி மெதுவாக துவக்கம்

இஸ்ரோ மையத்தில் இருந்து சந்திரயான் 3 விண்கலத்தை தீவிரமாக கண்காணிக்கின்றனர்

பெங்களூரு இஸ்ரோ மையத்தில் இருந்து தந்தி டி.வி. தரும் நேரடி தகவல்கள்...

சந்திரயான் 3 விண்கலம், இன்று மாலை நிலவில் தரை இறங்க உள்ள நிலையில், இந்த வரலாற்று நிகழ்வு குறித்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து எமது செய்தியாளர் பாரதிராஜா தரும் தகவல்களை கேட்கலாம்

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி பயணத்தில் இன்று மேலும் ஒரு முக்கிய மைல் கல்லை நோக்கி இஸ்ரோவின் சந்திராயன் மூன்று பயணிக்க உள்ளது. இதுவரை நிலவின் தென் துருவத்தில் யாரும் மென்மையாக தரையிறங்கியதில்லை. இன்று மாலை 5.40 மணி முதல் சந்திராயன் மூன்று வின்கலத்தின் விக்ரம் லாண்டர் மெதுவாக தரையிறங்கும் பணியை தொடங்குகிறது. இந்தப் பணிகளை தீவிரமாக கண்காணித்து வரும் இஸ்ரோ மையத்திலிருந்து நேரடி தகவல்களை பதிவு செய்கிறார் செய்தியாளர் பாரதிராஜா....

Tags:    

மேலும் செய்திகள்