"அரை மயக்கத்தில் உடலுறவுக்கு ஓகே சொன்னாலும்..." - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Update: 2023-08-09 04:03 GMT

அரை மயக்கத்தில் உள்ள பெண் பாலியல் உறவிற்கு சம்மதித்தாலும், அது சம்மதமாக கருதப்படாது என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கேரளா மாநிலம் எர்ணாகுளத்திலுள்ள கல்லூரியில், பட்டியலின மாணவியை மாணவன் ஒருவன் மயக்க மருந்து கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் தொடர்ந்து அந்த மாணவர், மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட மாணவன், ஜாமின் கோரி எஸ் சி/ எஸ் டி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் மாணவியின் சம்மதத்துடனே உறவு கொண்டதாக தெரிவித்திருந்தார். இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், ஜாமின் மனுவை நிராகரித்தது. இதனை எதிர்த்து மாணவன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், மாணவி அரை மயக்கத்தில் இருந்ததால், பாலியல் உறவிற்கு தெரிந்தே அனுமதி அளித்தாக கருத முடியாது என கூறி, மாணவனின் மனுவை தள்ளுபடி செய்தது.  

Tags:    

மேலும் செய்திகள்