பணம் எண்ணும் மெசினோடு வந்த ED - ரெய்டில் மொத்தமும் அம்பலம்.. அக்கவுண்ட் ஃப்ரீஸ்
கோஃப்ரீ சைக்கிள் நிறுவனத்தில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, உரிமையாளரை கைது செய்ய ரெட் கார்னர் நோட்டீஸ் அளித்துள்ளது.
புதுச்சேரியில் செயல்பட்டு வந்த ‘கோஃப்ரீ சைக்கிள் நிறுவனம், பொது மக்களிடம் 45 கோடி ரூபாய் வரை முதலீடு பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதன்பேரில், கணக்கில் வராத 2.45 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, நிறுவனத்தில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை 100 கோடி பணம் உள்ள வங்கி கணக்குகளை முடக்கியது. மேலும் வெளிநாட்டுக்கு தப்பியோடிய உரிமையாளர் நிஷாத் அகமதை பிடிக்க, அனைத்து நாட்டின் தூதரகங்களுக்கும் ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.