விமானப்படை அதிகாரி மீது தாக்குதல் - வீடியோ வைரல்

x

பெங்களூருவில் காரில் சென்ற விமானப்படை அதிகாரியை மர்மநபர்கள் தாக்கிய நிலையில், காயத்துடன் அவர் பேசிய வீடியோ வைரலாகியுள்ளது. வீடியோவில், தாங்கள் காரில் சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தன்னை தாக்கியதாகவும், மேலும் சிலர் தன்னை தாக்கியதுடன், தனது மனைவியையும் மர்மநபர்கள் அவதூறாக பேசியதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து போலீசாரிடம் புகாரளித்தும் எந்தவித பதிலும் அவர்களிடமிருந்து வரவில்லை என அவர் குற்றம்சாட்டிய நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்