களேபரமான பார்லிமென்ட்.... வந்தது தடை உத்தரவு | Delhi

Update: 2024-12-20 02:32 GMT

நாடாளுமன்றத்தில் உள்ள எந்த நுழைவு வாயில் முன்பு அரசியல் கட்சிகளோ அல்லது எந்தவொரு உறுப்பினரோ, குழுவினரோ போராட்டம் நடத்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, தடை விதித்துள்ளார். அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்ற நுழைவு வாயில் முன்பு நேற்று காலை இந்தியா கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்திய நிலையில் இரு தரப்பு எம்.பி.க்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், பாஜக எம்.பி.க்கள் இருவர் காயமடைந்தனர். பாஜக எம்.பி.க்கள் தள்ளியதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதி இருந்தார். இத்தகைய சூழலில் நாடாளுமன்றத்தின் நுழைவு வாயில்களில் போராட்டம் நடத்த மக்களவை சபாநாயகர் தடை விதித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்