தெலங்கானா முன்னாள் முதல்வரும், பிஆர்எஸ் தலைவருமான சந்திரசேகர் ராவ், சித்திபேட்டை சிந்தமடகாவில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜகவின் விதிப்படி 75 வயது ஆகிவிட்டால் ஓய்வு பெற வேண்டிய சூழலில், பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்றும், அது சாத்தியம் எனவும் தெரிவித்துள்ளார்... மேலும், இப்போது பிராந்திய கட்சிகள்தான் இந்தியாவில் அதிகாரம் பெறும் என்றும் சந்திரசேகர் ராவ் குறிப்பிட்டார்.