ரூ.24 கோடி மதிப்பிலான போதை கிரிஸ்டல் பறிமுதல்.. மூங் தால் கவருக்குள் வைத்து கடத்திய பலே கில்லாடி
பெங்களூருவில், போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 24 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள டிசி பால்யா பகுதியில் சிஎஸ்ஐபி போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அதில், 24 கோடி ரூபாய் மதிப்பிலான 12 கிலோ எம்டிஎம்ஏ கிரிஸ்டல் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் நைஜீரிய பிரஜைகளுக்கு கொடுப்பதற்காக, மும்பையிலிருந்து உணவு பொருட்களுடன் போதைப்பொருட்கள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. ரோஸ் லைம் என்பவர் போதைப்பொருட்களுடன் பிடிபட்ட நிலையில், ஜூலியட் என்ற பெண் தப்பிச்சென்றதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், 70 சிம் கார்டுகளை பறிமுதல் செய்துள்ள போலீசார், இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.