சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு.. -`கட்டாயம்..’ வெளியான முக்கிய செய்தி

Update: 2024-11-08 02:14 GMT

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆதார் அட்டை நகலை கட்டாயம் எடுத்து வர வேண்டும் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைகளுக்காக வரும் 15-ஆம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது. இந்த தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பக்தர்களுக்கும், உடனடி முன்பதிவு மூலம் 10 ஆயிரம் பக்தர்களுக்கும் அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பம்பை, எருமேலி, வண்டிப்பெரியார் ஆகிய இடங்களில் உடனடி முன்பதிவு மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்த முறை சீசன் தொடங்கியதில் இருந்து 18 மணி நேரம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார். மேலும், சபரிமலைக்கு வரும் பக்தர்கள் ஆதார் அட்டை நகலை கட்டாயம் எடுத்து வர வேண்டும் என்றும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்