திருப்பதியில் பிரமாண்டமாக திறக்கப்பட்ட சொர்க்கவாசல் - பிரமிக்க வைக்கும் காட்சி
திருப்பதி திருமலையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 10 டன் மலர்களால் கோவில் வளாகம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், மைசூர் அரண்மணையில் தசரா விழாவின் போது அமைக்கப்படும் மின்சார விளக்குகளை போன்று, மைசூரில் பணியாற்றும் மின் ஊழியர்களை வரவழைத்து, கோவில் வளாகம் மற்றும் திருமலை சுற்றுப்புற பகுதிகளில் மின் அலங்கார விளக்குகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. காலை 8 மணி முதல், சிறப்பு நுழைவு தரிசனம் மற்றும் சர்வ தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருமலையில் 10 நாட்கள் வைகுண்ட துவார தரிசனம் நடைபெறுகிறது.