நாடாளுமன்றத்தில் நடந்த களேபரம்..உடைந்த மண்டை... பாஜக MP Vs ராகுல் காந்தி..
நாடாளுமன்றத்தில் நடந்த களேபரம்..உடைந்த மண்டை... பாஜக MP Vs ராகுல் காந்தி.. மாறி மாறி அடுக்கிய குற்றச்சாட்டுகள்
அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசிய விவகாரத்தில் அவருக்கு எதிராக இந்தியா கூட்டணி எம்.பிக்களும், காங்கிரசுக்கு எதிராக பாஜக எம்.பிக்களும் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு நிலவியது..
மாநிலங்களவையில் நேற்று முன்தினம் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து பேசியதற்கு அம்பேத்கரை அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவர்
மன்னிப்பு கேட்க வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தியா கூட்டணி எம்பிகள் நாடாளுமன்ற வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, டி ஆர் பாலு, திருமாவளவன் ஆகியோரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்...
ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிகள் நீல நிற ஆடை அணிந்து ஜெய்பீம் முழக்கமிட்டனர்...
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை பகுதியில் இருந்து மகர் துவார் வரை பேரணி சென்றனர்... அதேபோல் பாஜக எம்.பிக்கள் காங்கிரசுக்கு எதிராக போராடினர்... ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் உள்துறை அமைச்சரின் பேச்சை திரித்து எதிர்மறையாக விளம்பரம் செய்து வருவதாக விமர்சித்தனர்.