இன்றைய தலைப்பு செய்திகள் (18-06-2024) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-06-18 15:53 GMT

நீட் வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி

நீட் முறைகேடு புகார் வழக்கில், தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று நோட்டீஸ்...

பூஜ்ஜியம் புள்ளி ஒரு சதவீதம் அலட்சியம் இருந்தாலும், அதனை முழுமையாக ஆராய வேண்டும் எனஅறிவுறுத்தல்...

பிரதமர் மோடி வழக்கம்போல் மவுனம் காப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றச்சாட்டு....

மீண்டும் அதிர்ச்சி சம்பவம்

சென்னை மயிலாப்பூரில் 6 வயது சிறுவனை தெருநாய் கடித்துக் குதறியதால் மீண்டும் அதிர்ச்சி...

பாதிக்கப்பட்ட சிறுவன் நலமுடன் இருப்பதாக சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா இன்று தகவல்...

சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களிடமிருந்து இதுவரை 43 லட்சம் ரூபாய் அபராதம் வசூல்...

ரேஷன் விநியோகம் - ஈ.பி.எஸ். கண்டனம்

ரேஷன் கடைகளில் ஜூன் மாதத்திற்கான பருப்பு, பாமாயில் விநியோகிக்கப்படவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று கண்டனம்...

ரேஷன் பொருள் தட்டுப்பாடின்றி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தல்....

ஜூன் மாதத்திற்கான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக உணவுத்துறை அதிகாரிகள் தகவல்...

இளைஞர் பலி - ஆந்திர எம்.பி. மகள் கைது

சென்னை பெசன்ட் நகரில் தாறுமாறாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில், நடைமேடையில் படுத்திருந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம்...

ஆந்திர மாநில எம்.பி.யின் மகள் இன்று கைது...

கீழடி 10ஆம் கட்ட அகழாய்வு தொடக்கம்

கீழடியில் 10ஆம் கட்ட அகழாய்வு பணிகளை இன்று தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...

கொந்தகை, வெம்பக்கோட்டை உள்பட 8 இடங்களிலும் அகழாய்வு தொடங்கியது...

"2026 சட்டமன்றத் தேர்தலே இலக்கு"

2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே இலக்கு...

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை எனவும் தமிழக வெற்றிக் கழகம் இன்று அறிவிப்பு...

நடிகர் விஜய் அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தால் நல்லது தான்

என, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அழைப்பு...

அறிக்கை சமர்ப்பிப்பு

ஒய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு...

பள்ளி, கல்லூரிகளில் ஜாதி இன உணர்வுகளைத் தடுக்க

20 பரிந்துரைகள்...

Tags:    

மேலும் செய்திகள்