`விடுதலை 2' - `நாளை ஒருநாள் மட்டும்' - தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு

Update: 2024-12-19 12:52 GMT

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் நடித்துள்ள விடுதலை 2 திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக படத்தின் சிறப்பு காட்சிகளை திரையிட அனுமதிக்குமாறு, படக்குழு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் படம் வெளியாகும் நாளை ஒருநாள் மட்டும் சிறப்புக் காட்சி திரையிட, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி நாளை ஒருநாள் மட்டும் காலை 9 மணிக்கு சிறப்புக்காட்சி திரையிடலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்