நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது ரசிகர்கள் தெலங்கானா முதல்வர்
ரேவந்த் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தை கடுமையாக விமர்சனம் செய்து சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வந்தனர். இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அளித்த புகாரின் பேரில் இதுவரை நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், அல்லு அர்ஜுன் ரசிகர்களின் சமூக ஊடக செயல்பாடுகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.