ஆத்திரத்தில் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் செய்த செயல்

Update: 2024-11-12 13:43 GMT

பிரபல நடிகர் அல்லு அர்ஜுனை இழிவாக சித்தரித்து வீடியோ வெளியிட்டதால் ஆத்திரமடைந்த அவருடைய ரசிகர்கள், தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள ரெட் டிவி யூடியூப் சேனலின் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சமீபத்தில் வெளியான வீடியோக்களால் கோபமடைந்த அல்லு அர்ஜுனின் ரசிகர்கள், அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்து, கணினி உள்ளிட்ட உபகரணங்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, உள்ளூர் அதிகாரிகள் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், இதுபோன்ற பிரச்சனைகளை சட்ட வழிமுறைகள் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்