சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையப்படுத்தி மற்றுமொரு படம்

Update: 2024-12-03 14:16 GMT

நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து மீண்டும் ஒரு திரைப்படம் உருவாகிறது. 80கள், 90களில் இந்திய அளவில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வந்த சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் புதிய படத்தில் நடிகை சந்திரிகா ரவி சில்க் ஸ்மிதாவாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ஜெயராம் சங்கர் இந்த படத்தை இயக்குகிறார். படத்தின் அறிமுக வீடியோ கவனம் ஈர்த்து வரும் நிலையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படம் திரைக்கு வருகிறது. ஏற்கனவே வித்யாபாலன் நடிப்பில் DIRTY PICTURE படம் சில்க் ஸ்மிதா கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்