பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன் புற்றுநோயால் மரணம்

Update: 2024-12-04 02:53 GMT

சுமார் 25 வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையில் கோலோச்சி, மக்களின் மனதில் இடம் பிடித்திருந்த நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்திருக்கிறார்..


நேத்ரனுக்கு தீபா என்பவருடன் திருமணமாகி இரு மகள்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நேத்ரனை போலவே அவரது மனைவி தீபாவும், மூத்த மகள் அபிநயாவும் சின்னத்திரையில் தோன்றி தங்களின் திரையுலக பயணத்தை தொடர்ந்திருந்தனர்..

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேத்ரனுக்கு புற்று நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது..

மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்த நேத்ரன், கல்லீரல் முழுவதும் செயலிழந்து ஐசியூவில் இருந்து வந்ததாக கூறப்பட்டது..

இதனிடையே, நேத்ரனின் மூத்த மகளான அபிநயா, தனது தந்தை புற்று நோயால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும், தங்களின் பிரார்த்தனைகளால் தனது தந்தை மீண்டு வர விரும்புகிறேன் எனவும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது..


திரையுலகினர் மற்றும் ரசிகர்களின் பிரார்த்தனைகளுக்கிடையே மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த நேத்ரன், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பது அனைவரையும் கலங்கடித்திருக்கிறது...

Tags:    

மேலும் செய்திகள்