போன பிறந்தநாளில் எடுத்த சபதம் இந்த பிறந்தநாளில் ஆரம்பித்த சூர்யா - வீடியோ காலில் செம மெசேஜ்
தனது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் சூர்யா ரத்த தானம் செய்தார். ரசிகர்களைப் போலவே ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்ததானம் செய்ய உள்ளேன் என கடந்த ஆண்டு எடுத்துக்கொண்ட உறுதி மொழியினை நிறைவேற்றும் விதமாக, நடிகர் சூர்யா தன் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததானம் செய்துள்ளார். மேலும், வடசென்னை சூர்யா நற்பணி மன்றம் மூலம் ரத்த தானம் செய்ய முன்வந்தவர்களை வீடியோ கால் மூலம் சூர்யா பாராட்டினார்.