வில்வித்தை பயிற்சியாளர் ஷிஹான் ஹுசைனியின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தின் அருகிலேயே அவரது வளர்ப்பு நாய் சோகத்துடன் படுத்திருந்தது. ஹுசைனி உடல் பெசன்ட் நகர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அவர்களது வீட்டில் "பீநட்" எனும் செல்லப்பெயரோடு கடந்த ஏழு ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வரும் நாய், ஹுசைனி உடலுக்கு அருகிலேயே சோகத்துடன் காணப்பட்டது.