வில்வித்தை பயிற்சியாளரும், நடிகருமான ஷிஹான் ஹுசைனியின் உடல் மதுரையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, ஷிஹான் ஹுசைனி சிகிச்சை பலனின்றி காலமானார். சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடல், பின்பு சொந்த ஊரான மதுரைக்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள், உறவினர்கள் அஞ்சலிக்கு பிறகு, இறுதி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் மதுரை காஜிமார் தெருவில் உள்ள பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில், ஷிஹான் ஹுசைனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.