"ரெட்ரோ" திரைப்படம் குறித்து சந்தோஷ் நாராயணன் கொடுத்த அப்டேட்டால் ரசிகர்கள் ஆரவாரமடைந்தனர். கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பித்தார். அப்போது மாணவர்களுடன் நடனமாடி வைப் செய்த அவர், தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகி வரும் "ரெட்ரோ" படத்தின் அப்டேட்டை தெரிவித்ததால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.