லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு மாநிலங்களவையில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இளையராஜாவின் மரபு தொடர்ந்து ஊக்கமளிப்பதாகக் கூறிய ஜெகதீப் தங்கர், இளையராஜாவின் மெல்லிசைகள் உலகைக் கவர்ந்திழுக்கட்டும் என வாழ்த்தினார். தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர்கள் இளையராஜாவிற்கு கரவொலி எழுப்பி வாழ்த்து தெரிவித்தனர்.


