பார்த்திபனுக்கு வந்த திடீர் சோதனை - புலம்பும் ரசிகர்கள்

Update: 2024-11-08 08:04 GMT

நடிகர் பார்த்திபன் அலுவலகத்தில் இருந்த 12 சவரன் தங்க நகைகள் மாயமானதாக காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளதன் பின்னணியை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...

திரையுலகில், நடிகர், இயக்குநர், எழுத்தாளர், என பன்முகத்தன்மையுடன் வலம் வந்த பார்த்திபன், அண்மையில் வந்தே பாரத் ரயில் உணவு குறித்து புகாரளித்து பரபரப்பை கிளப்பியிருந்தார்.

இந்நிலையில் அவரது வீட்டில் 12 சவரன் தங்க நகைகள் மாயமானதாக அவர் புகாரளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

சென்னை நந்தனம் விரிவாக்கம் 7வது தெருவில் நடிகர் பார்த்திபனின் வீடு அமைந்துள்ளது. தனது வீட்டின் கீழ் தளத்திலேயே தனது அலுவலகத்தையும் நடத்தி வருகிறார்..

இந்நிலையில் தான் சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார் நடிகர் பார்த்திபன்...

அதில், அலுவலக அறையில் பை ஒன்றை வைத்திருந்ததாகவும், அதில் 12 சவரன் தங்க நகை வைத்திருந்த நிலையில், பையோடு தங்க நகைகளும் காணவில்லை என புகாரளித்துள்ளார்.

இதையடுத்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, அலுவலகத்தில் பணியாற்றி வரும் 6 ஊழியர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

அப்போது, பார்த்திபன் வீட்டிலேயே நகை இருப்பதாக உதவியாளராக வேலை பார்த்த கிருஷ்ணா காந்த் தெரிவித்துள்ள நிலையில், கிருஷ்ணகாந்திடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் நகைகளை ஊழியர்கள் வழங்கியதால், நடிகர் பார்த்திபன் தனது புகாரை வாபஸ் பெற்றார். இதனால் மேல் நடவடிக்கை வேண்டாம் என பார்த்திபன் கேட்டுக் கொண்டதால் ஊழியரை சைதாப்பேட்டை போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இது போன்ற சம்பவம் பார்த்திபனுக்கு புதிதல்ல...

ஏற்கனவே 2018ம் ஆண்டு திருவான்மியூரில் இருந்த பார்த்திபனின் வீட்டில் பீரோ லாக்கரில் வைத்திருந்த தங்க கட்டிகள், தங்க முலாம் பூசிய பதக்கங்கள், காணவில்லை என புகாரளித்திருந்தார்..

அந்த சம்பவத்தின் போதும், வேலையாட்கள் திருடியிருக்கலாம் என்ற கோணத்திலேயே விசாரணை நடத்தப்பட்டது..

இதென்னப்பா பார்த்திபனுக்கு வந்த சோதனை என புலம்புகின்றனர் அவரது ரசிகர்கள்...

Tags:    

மேலும் செய்திகள்