பழம்பெரும் நடிகையும் நடனக் கலைஞருமான வைஜெயந்திமாலா,, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் தரிசனம் செய்தார். 91 வயதாகும் வைஜெயந்திமாலா அரங்கநாதர் சுவாமி மற்றும் தாயார் சன்னதியை சக்கர நாற்காலியில் சுற்றி வந்து, மூலஸ்தானத்திற்கு நடந்து சென்று குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். அவருடன் ஏராளமான பக்தர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.