இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஹாலிவுட் விருது

Update: 2024-11-22 02:38 GMT

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ப்ளெஸ்ஸி இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ஆடு ஜீவிதம்...

இத்திரைப்படத்தில் தண்ணீர், உணவின்றி, பாலைவனத்தில் பரிதவிக்கும் கதாநாயகன் கதாபாத்திரத்தை நேர்த்தியாக நடித்து கொடுத்ததாக பிரித்விராஜ்க்கு பாராட்டுகள் குவிந்ததோடு....நிஜக் கதையை தத்ரூபமாக எடுத்தததாக படக்குழுவுக்கும் பாராட்டு குவிந்தது..

அத்துடன் படத்தின் பின்னணி இசையும் தனித்துவமாக தெரிந்தது...

பாலைவனத்தில் பரிதவிக்கும் காட்சிகளுக்கு உயிரூட்டியதாகவும், கதாபாத்திரங்களின் ஆழத்தை உணர்த்தியதாகவும் இயக்குநர் ப்ளெஸ்ஸி புகழாரம் சூட்டியிருந்தார்..

இந்நிலையில், படத்திற்கும் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கும் மற்றொரு மகுடமாய் வந்துள்ளது ஹாலிவுட்டின் உயரிய விருதான ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது..

லாஸ் ஏஞ்சல்சில் நடந்த இந்த நிகழ்ச்சியில், சுயாதீன திரைப்படத்துக்கான பிரிவில் ஆடு ஜீவிதம் திரைப்படம் சிறந்த பின்னணி இசைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

இதில் ஏ.ஆர். ரகுமான் சார்பாக, இயக்குநர் ப்ளெஸ்ஸி பெற்றுக் கொண்டார்.

இது மட்டுமன்றி ஏ.ஆர். ரகுமானின் பெரியோனே பாடல், Feature Film category-ல் பரிந்துரைக்கப்பட்டது...

இதற்காக ஹாலிவுட் மியூசிக் மீடியாவுக்கு நன்றி சொன்ன ஏ.ஆர். ரகுமான், தன்னுடன் பணியாற்றிய இசை கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்