டிராகன் ரிலீஸ் எப்போது..? ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன் | Dragon
டிராகன் திரைப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் திரைக்கு வர வாய்ப்புள்ளதாக நடிகர் பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். லவ் டுடே படத்தின் மூலம் பிரபலமான பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படங்களில் நடிக்கிறார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பிரதீப் ரங்கநாதன், தனக்கு அடுத்த படமாக டிராகன் படம் வெளியாகும் எனவும், இது அனைத்து அம்சங்களும் கொண்ட படமாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.