மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி, இயக்குநர் பாரதிராஜாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக பாரதிராஜாவை சந்தித்த அவர், கலை, இலக்கியம், அரசியல் குறித்து கலந்துரையாடினர். அப்போது, பாலஸ்தீன அகதிகளின் துயரங்களை பேசும் நக்பா - பேரழிவுகளின் பெருங்குரல்கள் புத்தகங்களை பாரதிராஜாவுக்கு, தமிமுன் அன்சாரி வழங்கினார்.