திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் காண்டூர் கால்வாய் பக்கம் சென்ற ஒரு ஆண், ஒரு பெண் என வயதானவர்கள் இருவர் திடீரென நீரில் விழுந்து மூழ்கினர். இதைக் கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களின் உடல்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், நீரின் வேக மிகுதியால் முதியவர்களை மீட்க முடியவில்லை என தெரிகிறது. காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில், இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். முதியவர்கள் இருவரையும் அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.