கோவை குண்டு வெடிப்பு சம்பவம் - விசாரித்து விட்டு டெல்லி திரும்பிய NIA இயக்குநர்
தேசிய புலனாய்வு முகமை அமைப்பின் இயக்குநர் தினகர் குப்தா சென்னையில் இருந்து டெல்லி திரும்பினார்.
நேற்றைய தினம் சென்னை வந்த அவர், கோவை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை நிலை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய என்ஐஏ இயக்குநர் தினகர் குப்தா, கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தற்போது வரை என்ஐஏ விசாரணையில் உள்ள 11 முக்கிய வழக்குகள் விசாரணைக்கு போலீஸ் உதவி வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.