சென்னை விமான நிலையத்திற்குள் பயணிகளை அனுமதிப்பதற்கு முன் நுழைவு வாயில்களில், டிக்கெட் மற்றும் அடையாளச் சான்றுகளை மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் சரிபார்ப்பார்த்து அனுமதிப்பார்கள். போலி டிக்கெட்டுகளை தயாரித்து, கடைசி வரை நண்பர் அல்லது உறவினரைப் பார்க்க முனையத்திற்குள் பார்வையாளார்கள் நுழையும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. விமான நிலையத்தில் இருந்து சரியான காரணம் இல்லாமல் பயணிகள் வெளியேறும் போது போலி டிக்கெட் வைத்து இருக்கும் நபர்கள் பிடிபடுவார்கள். போலி டிக்கெட்டுகளுடன் பார்வையாளர்கள் சென்னை விமான நிலையத்திற்குள் நுழைவதைத் தடுக்கவும், மத்திய தொழிற்படை போலீசார் டிக்கெட்டின் செல்லுபடியை சரி பார்க்க, 2டி பார்கோடு ஸ்கேனரை, சர்வதேச முனையத்தில் அதிகாரிகள் பொருத்தியுள்ளனர். உள்நாட்டு முனையங்களில் ஏற்கனவே 3 பார்கோடு ஸ்கேனர்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல நுழைவு வாயில்களில் பார்கோடு ஸ்கேனர்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.