வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம், நூதன முறையில் நகை திருடிய இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சொக்கநாதபுரம் பகுதியில், விமலா என்ற பெண்ணிடம் கால் கொலுசு, தங்க சங்கிலிகளை மெருகேற்றி தருவதாக 2 இளைஞர்கள் கூறியுள்ளனர்.
கால் கொலுசு மெருகேற்றி கொடுத்த நிலையில், ஒன்றரை சவரன் தங்க சங்கிலியை அவர் வழங்கியுள்ளார்.
நகையை காகிதத்தில் சுற்றி 5 நிமிடங்கள் கழித்து திறந்து பார்க்க சொல்லிவிட்டு, அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.
காகிதத்தை திறந்து பார்த்தபோது அது உடைந்த பித்தளை சங்கிலி என்பது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக அந்த இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.