23வது ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் வரும் 2026 ஆம் ஆண்டு, வரலாற்றில் முதல் முறையாக 3 நாடுகளில் நடைபெற உள்ளது. அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் உள்ள 16 நகரங்களில் 104 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அதிகாரப்பூர்வ லோகோவை ஃபிஃபா வெளியிட்டுள்ளது. 'வீ ஆர் டுவண்டி சிக்ஸ்' என்ற ஹேஷ்டேக் பிரச்சாரத்துடன் லோகோ வெளியிடப்பட்டுள்ளது.