"வாரத்தின் 7 நாட்களும் வேலை; மாணவர்களுக்கு எப்படி பாடம் நடத்த முடியும்?" - ஆசிரியர் சங்கம் கேள்வி
"வாரத்தின் 7 நாட்களும் வேலை; மாணவர்களுக்கு எப்படி பாடம் நடத்த முடியும்?" - ஆசிரியர் சங்கம் கேள்வி
தேர்தல் இல்லாத நேரங்களிலும், தேர்தல் சார்ந்த பணிகளை ஆசிரியர்களுக்கு வழங்குவதால், வாரத்தின் 7 நாட்களும் வேலை பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் தியாகராஜன் கூறியுள்ளார். இதுகுறித்து தந்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், தேர்தல் அல்லாத நேரங்களில் தேர்தல் தொடர்பான பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதைத் தவிர்க்க தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.